tamilnadu

img

கரோனா வைரஸ் : சீனாவுக்கு விமான சேவையை நிருத்திய பிரிட்டிஷ் ஏர்வேஸ்

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனாவுக்கான அனைத்து விமான சேவையை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுத்தியுள்ளது.

சீனாவின் உகான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட மொத்தம் 15 நாடுகளில் கரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சீனாவுக்கான அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது. அதே போல், கரோனா வைரஸ் அச்சம் காரணமாக, சீன சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான ரஷியாவின் யூரல்ஸ் ஏர்லைன்ஸ், பாரிஸ் மற்றும் ரோம் உள்ளிட்ட சில ஐரோப்பிய நகரங்களுக்கான விமான சேவையை நிறுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, வரும் பிப்ரவரி 1 முதல் இந்தியாவில் இருந்து ஹாங்காங் உட்பட சீனாவுக்கான விமான சேவைகளை நிறுத்தி வைப்பதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.